மாவட்ட செய்திகள்

புகையிலை பொருட்கள் வைத்திருந்த 2 பேர் கைது + "||" + 2 arrested for possession of tobacco products

புகையிலை பொருட்கள் வைத்திருந்த 2 பேர் கைது

புகையிலை பொருட்கள் வைத்திருந்த 2 பேர் கைது
நெல்லையில் புகையிலை பொருட்கள் வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
பெருமாள்புரம் போலீசார் நெல்லை புதிய பஸ் நிலையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து அவர்கள் வைத்திருந்த பைகளை சோதனை செய்தனர். அப்போது அதில் புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது.
போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வல்லகுளம் பகுதியை சேர்ந்த சுடலை ராஜா, ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த முகமது இன்சார் ஆகியோர் என்பதும், விற்பனைக்காக புகையிலை பொருட்களை வைத்திருந்ததும் தெரிய வந்தது. உடனே போலீசார் 2 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த 15 கிலோ புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. குண்டர் சட்டத்தி்ல் 2 பேர் கைது
நெல்லை மாவட்டத்தில் குண்டர் சட்டத்தி்ல் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
2. வாடகை வீட்டில் விபசாரம்; 2 பேர் கைது
வாடகை வீட்டில் விபசாரம் நடத்தியதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
3. மூங்கில்துறைப்பட்டு அருகே சாராயம் கடத்திய 2 பேர் கைது
மூங்கில்துறைப்பட்டு அருகே சாராயம் கடத்திய 2 பேர் கைது
4. தடுப்பு காவல் சட்டத்தில் 2 பேர் கைது
தடுப்பு காவல் சட்டத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டனா்.
5. ரூ.10 லட்சம் நில மோசடியில் 2 பேர் கைது
ரூ.10 லட்சம் நில மோசடியில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.