மின்னல் தாக்கி மாடு செத்தது


மின்னல் தாக்கி மாடு செத்தது
x
தினத்தந்தி 4 Sept 2021 2:09 AM IST (Updated: 4 Sept 2021 2:09 AM IST)
t-max-icont-min-icon

தா.பழூர் அருகே மின்னல் தாக்கி மாடு செத்தது.

தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள வாழைக்குறிச்சி கீழத்தெருவை சேர்ந்தவர் சத்தியவாணி. இவர் வங்கியில் கடனுதவி பெற்று பசுமாடுகளை வாங்கி வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை தா.பழூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அந்நேரத்தில் சத்தியவாணிக்கு சொந்தமான ஒரு மாடு, வாழைக்குறிச்சி கொள்ளிடம் ஆற்றுப்படுகையில் உள்ள வயல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென ஏற்பட்ட மின்னல் தாக்கியதில் மேய்ந்து கொண்டிருந்த பசுமாடு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதுபற்றி தகவல் அறிந்து வந்த வருவாய்த்துறையினர் மற்றும் கால்நடைத்துறையினர் ஆய்வுக்குப்பின் பசுமாட்டை அடக்கம் செய்தனர்.

Next Story