மழை வேண்டி கோவிலில் சிறப்பு அபிஷேகம்


மழை வேண்டி கோவிலில் சிறப்பு அபிஷேகம்
x
தினத்தந்தி 3 Sep 2021 8:39 PM GMT (Updated: 2021-09-04T02:09:39+05:30)

மழை வேண்டி கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதியில் பருத்தி மற்றும் மக்காச்சோள விதைகளை மானாவாரி நிலத்தில் பெரும்பாலானோர் ஊன்றியுள்ளனர். விதை ஊன்றியதில் இருந்து போதிய மழை இல்லாததால் விதைகள் முழுமையாக முளைக்காமல் விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர். மேலும் பல விவசாயிகள் விதைகளை விதைக்காமல் உள்ளனர். இந்நிலையில் வேப்பந்தட்டை கிராம மக்கள் ஒன்றிணைந்து அடைக்கலம் காத்தவர் சுவாமி கோவிலில் மழை வேண்டி சிறப்பு அபிஷேகம் செய்தனர். பின்னர் பொதுமக்கள் சார்பில் பொங்கல் வைத்து அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து, அன்னதான உணவை சாப்பிட்டனர்.

Next Story