பள்ளி மாணவியை கடத்தி திருமணம் செய்த ஆட்டோ டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது


பள்ளி மாணவியை கடத்தி  திருமணம் செய்த ஆட்டோ டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 5 Sep 2021 4:38 PM GMT (Updated: 2021-09-05T22:08:29+05:30)

பேரணாம்பட்டு அருகே பள்ளி மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்த ஆட்டோ டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

பேரணாம்பட்டு

பேரணாம்பட்டு அருகே பள்ளி மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்த ஆட்டோ டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

ஆசை வார்த்தைகூறி கடத்தல்

பேரணாம்பட்டு அருகே உள்ள சிவனகிரி கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மதிக்கத்தக்க ஒரு மாணவி பேரணாம்பட்டில் உள்ள அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் -2 படித்து வருகிறார். மாணவி கடந்த ஆகஸ்டு மாதம் 31-ந்தேதி வீட்டில் பெற்றோரிடம் கடைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் அவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் மாணவியை காணவில்லை. மாணவியை பாத்தபாளையம் கிராமத்தைச் சேர்ந்த முருகேசனின் மகனும் ஆட்டோ டிரைவருமான வினோத் என்ற வினோத்குமார் (வயது 31) என்பவர் ஆசை வார்த்தைகளை கூறி ஏமாற்றி கடத்தி சென்றது தெரிய வந்தது. 

இது குறித்து பேரணாம்பட்டு போலீசில் மாணவியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜன்பாபு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மாணவியை கடத்தி சென்ற ஆட்டோ டிரைவர் வினோத்குமாரை தேடி வந்தார். நேற்று மதியம் பேரணாம்பட்டு-குடியாத்தம் சாலையில் பேரணாம்பட்டு போலீசார் ரோந்துச் சென்றபோது, அந்த வழியாக ஆட்டோவில் வந்த வினோத்குமாைரயும், மாணவியையும் போலீசார் பிடித்து விசாரித்தனர். 

ஆட்டோவில் சென்று வந்தபோது காதல்

ஆட்டோவில் பள்ளிக்கு சென்று வந்தபோது தனக்கும், அவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் காதலித்தோம். ஆசை வார்த்தைகளை கூறி, என்னை ஏமாற்றி ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் புங்கனூருக்கு கடத்தி சென்ற வினோத்குமார், அங்குள்ள ஒரு கோவிலில் வைத்து மாலை மாற்றி என்னை திருமணம் செய்து கொண்டு வெளியூரில் தங்கியிருந்ததாக மாணவி தெரிவித்தார். இதையடுத்து ஆட்டோ டிரைவர் வினோத்குமார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அவரை, போலீசார் குடியாத்தம் சப்-மாஜிஸ்திரேட் முன்பாக ஆஜர்படுத்தினர்.


Next Story