விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம்


விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 5 Sep 2021 5:03 PM GMT (Updated: 2021-09-05T22:33:57+05:30)

வாணியம்பாடியில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம் நடந்தது.

வாணியம்பாடி

வாணியம்பாடியில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம் நடந்தது.

வாணியம்பாடி டவுன் போலீஸ் நிலையத்தில், துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி செல்வம் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழா குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

கூட்டத்தில் இந்து முன்னணி, பாரதீய ஜனதா கட்சி மற்றும் பல்வேறு இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி வரும் 10-ந் தேதி பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கவோ, ஊர்வலம் நடத்தவோ கூடாது என்ற அரசு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

அதற்கு புதுச்சேரி, தெலுங்கானா மாநிலங்களில் அனுமதி வழங்கியுள்ளது போன்று தமிழகத்தில் வழங்க வேண்டும்,  

கொரோனா நோய் தொற்று பரவாத வகையில் அரசு விதிமுறைகளை கடைபிடித்து கொண்டாடி கொள்கிறோம், 

எனவே பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், ஊர்வலம் நடத்தவும் அனுமதி வழங்க அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என இந்து அமைப்பினர் கேட்டுக்கொண்டனர். 

இதை மனுவாகவும் கொடுத்தனர். கூட்டத்தில் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.


Next Story