தொண்டி,
திருவாடானை தாலுகா தேளூர் கிராமத்தில் தாசில்தார் செந்தில்வேல் முருகன், மண்டல துணை தாசில்தார் சேதுராமன், தொண்டி வருவாய் ஆய்வாளர் அமுதன், தேளூர் கிராம நிர்வாக அலுவலர் பிரகாஷ் ஆகியோர் ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எம்.சாண்ட் மணலுடன் நின்ற லாரியை ஆய்வு செய்தனர். அதில் காலாவதியான அனுமதி சீட்டு வைத்திருந்த நிலையில் அளவுக்கு அதிகமாக 2 யூனிட் மணலுக்கு 8 யூனிட் எம்.சாண்ட் மணல் வைத்திருந்தது தெரியவந்துள்ளது. அதனை தொடர்ந்து லாரியை பறிமுதல் செய்த வருவாய்துறையினர் லாரி டிரைவர் சிவகங்கை மாவட்டம் கீழக்கண்டனி மகேஸ்வரன் (வயது 30) என்பவரையும் தொண்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.