மாவட்ட செய்திகள்

பஸ்சில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு + "||" + Death of a woman who fell off a bus

பஸ்சில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு

பஸ்சில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு
பஸ்சில் இருந்து தவறி விழுந்த பெண் பரிதாபமாக இறந்தார்.
அறந்தாங்கி:
அறந்தாங்கி அருகே கொடிவயல் வடக்கையை சேர்ந்தவர் சாந்தி (வயது 45). இவர் நேற்று ரெத்தினகோட்டையில் உள்ள அவரது அண்ணன் மகனை பார்த்து விட்டு மீண்டும் ஊருக்கு செல்ல அரசு டவுன் பஸ்சில் ஏறியுள்ளார். பஸ் வல்லவாரி பாலம் அருகே வந்த போது சாந்தி, தனது ஊருக்கு செல்லாத வேறொரு பஸ்சில் ஏறி விட்டவதாக கூறி பஸ்சில் இருந்து அவசரமாக இறங்கினார். அப்போது நிலைதடுமாறி சாலையில் கீழே விழுந்ததில் அவர் படுகாயமடைந்தார். இதையடுத்து அவர் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சாந்தி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அறந்தாங்கி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மோட்டாா் சைக்கிளில் சென்றபோது மயங்கி விழுந்து பெண் பலி
மோட்டாா் சைக்கிளில் சென்றபோது மயங்கி விழுந்த பெண் உயிரிழந்தார்.
2. மொபட்டில் சென்ற தம்பதி பலி
மொபட்டில் சென்ற தம்பதி பரிதாபமாக இறந்தனர்.
3. மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயம் அடைந்தவர் சாவு
மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயம் அடைந்தவர் பரிதாபமாக இறந்தார்.
4. தீயில் கருகி இளம்பெண் சாவு
மதுரையில் தீயில் கருகி இளம்பெண் பலியானார்.
5. குட்டையில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு
குட்டையில் மூழ்கி பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான்.