ஆழ்வார்தோப்பு கட்டயம்புதூர் சந்தன மாரியம்மன் கோவில் கொடை விழா


ஆழ்வார்தோப்பு கட்டயம்புதூர்  சந்தன மாரியம்மன் கோவில் கொடை விழா
x
தினத்தந்தி 9 Sep 2021 1:04 PM GMT (Updated: 2021-09-09T18:34:47+05:30)

ஆழ்வார்தோப்பு கட்டயம்புதூர் சந்தன மாரியம்மன் கோவில் கொடை விழா நடந்தது.

ஸ்ரீவைகுண்டம்:
 ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கீ.வ.ஆழ்வார்தோப்பு கட்டயம்புதூர் சந்தன மாரியம்மன் கோவில் கொடை விழா நடந்தது. முதல்நாள் திருவிழாவில் குடியழைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து இரவு 8 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது. மறுநாள் காலை 8 மணிக்கு அன்னதானமும், காலை 9 மணிக்கு பால்குடம் எடுத்து வருதல் நிகழ்ச்சியும், மதியம் 12 மணிக்கு மதியக் கொடையும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மதியம் 12 மணிக்கு அன்னதானமும், மாலை 4 மணிக்கு தாமிரபரணி ஆற்றிலிருந்து புனிதநீர் கும்பம் எடுத்து வருதல் நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு சந்தன மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அலங்கார பூஜைகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும், வில்லிசை நிகழ்ச்சியும், நடைபெற்றது. இரவு 12 மணிக்கு நள்ளிரவு சாமக்கொடையும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. 3-ம் நாள் காலை 8 மணிக்கு அன்னதானமும், காலை10 மணிக்கு கிடாவெட்டும் நிகழ்ச்சியும் சிறப்பு பூஜைகளுடன் கொடை விழா நிறைவு பெற்றது. விழா நாட்களில் சிறப்பு பூஜைகளும் அலங்கார பூஜைகளும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story