மாவட்ட செய்திகள்

மாணவிகளை கடத்திய 2 வாலிபர்கள் போக்சோவில் கைது + "||" + 2 teenagers arrested for kidnapping students

மாணவிகளை கடத்திய 2 வாலிபர்கள் போக்சோவில் கைது

மாணவிகளை கடத்திய 2 வாலிபர்கள் போக்சோவில் கைது
மாணவிகளை கடத்திய 2 வாலிபர்கள் போக்சோவில் கைது செய்யப்பட்டனர்.
போடி:
போடி அருகே உள்ள தம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 23). இவர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வரும் மாணவியை கடத்தி சென்றுவிட்டார். 
இதேபோல் ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர் ஹரிஹரசுதன் (19). இவர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வரும் மாணவியை கடத்தி சென்று விட்டாா். இந்த இரு சம்பவங்கள் குறித்து போடி நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் கோபாலகிருஷ்ணன், ஹரிஹரசுதன் ஆகிய 2 பேர் மீதும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.