திருப்பத்தூர் நகராட்சியில் தினமும் 200 டன் குப்பைகளை பிரித்தெடுக்க நடவடிக்கை
திருப்பத்தூர் நகராட்சியில் தேங்கியுள்ள குப்பைகளை பிரித்தெடுக்க வாங்கியுள்ள நவீன என்திரம் மூலம் தினமும் 200 டன் குப்பைகளை பிரித்தெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் நகராட்சியில் தேங்கியுள்ள குப்பைகளை பிரித்தெடுக்க வாங்கியுள்ள நவீன என்திரம் மூலம் தினமும் 200 டன் குப்பைகளை பிரித்தெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
200 டன் குப்பைகளை...
மண்டல நகராட்சிகள் நிர்வாக இயக்குனர் குபேந்திரன் நேற்று, திருப்பத்தூர் அண்ணாநகர், கலைஞர் நகர், ஜார்ஜ் பேட்டையில் உள்ள திடக்கழிவு மேலாண்மை திட்ட மையத்தை பார்வையிட்டு உரம் தயாரிக்கும் பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் திருப்பத்தூர் பவுச நகரில் ரூ.9 கோடியே 53 லட்சத்தில் நடைபெற்று வரும் மக்கும் குப்பை, மக்காத குப்பை பிரித்து எடுக்கும் பணிகளை பார்வையிட்டார்.
அப்போது அங்கு பல ஆண்டுகளாக சேகரிக்கப்பட்டு குப்பைகள் மலைபோல் குவிந்து கிடப்பதையும், புதிதாக வாங்கப்பட்ட அதிநவீன குப்பைகளைப் பிரித்து எடுக்கும் எந்திரங்களையும் ஆய்வு செய்தார். அப்போது புதிய எந்திரம் மூலம் தினமும் 200 டன் குப்பைகளை பிரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
குப்பையில்லா நகரமாக
குப்பைகளை பிரித்து பிளாஸ்டிக் பொருட்களை தொழிற்சாலைகளுக்கு வழங்க உத்தரவிட்டார். மேலும் வீடு வீடாகச் சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து வாங்கவேண்டும். திருப்பத்தூர் நகராட்சியை குப்பையில்லா நகரமாக மாற்ற வேண்டும் என தெரிவித்தார்.
உடன் நகராட்சி ஆணையாளர் ஏகராஜ், பொறியாளர் உமாமகேஸ்வரி, பணி மேற்பார்வையாளர் சீனிவாசன், அன்பரசு உள்பட பலர் உடனிருந்தனர்,
Related Tags :
Next Story