மாவட்ட செய்திகள்

அரக்கோணம் அருகே மூதாட்டியிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு + "||" + 6 pound chain flush with grandmother

அரக்கோணம் அருகே மூதாட்டியிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு

அரக்கோணம் அருகே மூதாட்டியிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு
மூதாட்டியிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு
அரக்கோணம்

அரக்கோணத்தை அடுத்த கைனூர் நேதாஜி நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி கங்கம்மாள் (வயது 79). இவர் நேற்று முன்தினம் இரவு அரக்கோணத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். பின்னர் தெரிந்த நபருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அரக்கோணம் என்ஜினீயரிங் ஒர்க்‌ஷாப் அருகே மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் கங்கம்மாள் அணிந்திருந்த 6 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச்சென்றனர். 

இது குறித்து அரக்கோணம் டவுன் போலீசில் கங்கம்மாள் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.