மாவட்ட செய்திகள்

ரெயில் மோதி மூதாட்டி சாவு + "||" + Train collision kills grandmother

ரெயில் மோதி மூதாட்டி சாவு

ரெயில் மோதி மூதாட்டி சாவு
லாலாபேட்டையில் ரெயில் மோதி மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.
லாலாபேட்டை, 
மூதாட்டி பலி
லாலாபேட்டை மேலவிட்டு கட்டியை சேர்ந்தவர் கதிராயி (வயது 80). இவர் நேற்று முன்தினம் மாலை லாலாபேட்டை காவிரி ஆற்றில் குளித்துவிட்டு ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது மயிலாடுதுறையில் இருந்து கோவை செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் அவர் மீது பயங்கரமாக மோதியது.
இதில், கதிராயி உடல் சிதைந்து ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.
பிரேத பரிசோதனை
இதுகுறித்து தகவல் அறிந்த கரூர்ரெயில்வே இன்ஸ்பெக்டர் மருதவீரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.