மாவட்ட செய்திகள்

பெண்ணிடம் 5 பவுன் தாலிச்சங்கிலி பறிப்பு + "||" + 5 pound necklace flush with woman

பெண்ணிடம் 5 பவுன் தாலிச்சங்கிலி பறிப்பு

பெண்ணிடம் 5 பவுன் தாலிச்சங்கிலி பறிப்பு
பெண்ணிடம் 5 பவுன் தாலிச்சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கொளக்காநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மனைவி ஜோதி(வயது 38). இவர் நேற்று முன்தினம் தனது உறவினர் வீட்டின் திருமண பெண் அழைப்பிற்காக கொளப்பாடி கிராமத்திற்கு பஸ்சில் செல்ல நின்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் ஜோதி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலிச்சங்கிலியை பறித்தனர். இதனால் ஜோதி சுதாரிப்பதற்குள், சங்கிலியுடன் 3 பேரும் மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பிச்சென்றனர். இது குறித்து ஜோதி மருவத்தூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாலிச்சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் தாலி சங்கிலி பறிப்பு
ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் தாலி சங்கிலி பறித்த மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
2. தனியார் நிதிநிறுவன ஊழியரிடம் ரூ.1 லட்சம்-3 பவுன் நகை பறிப்பு
தனியார் நிதிநிறுவன ஊழியரிடம் ரூ.1 லட்சம்-3 பவுன் நகை பறிப்பு
3. மோட்டார் சைக்கிளில் சென்ற ஊழியரிடம் ரூ.11 லட்சம் பறிப்பு
மதுரையில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஊழியரிடம் ரூ.11 லட்சம் பறிக்கப்பட்டது.
4. கழிப்பறையில் பதுங்கி இருந்து பெண்ணிடம் நகை பறிப்பு
ஸ்ரீமுஷ்ணத்தில் கழிப்பறையில் பதுங்கி இருந்து பெண்ணிடம் நகையை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
5. ஓய்வு பெற்ற உடற்கல்வி இயக்குனரிடம் ரூ2½ லட்சம் பறிப்பு
ஸ்ரீரங்கத்தில் பட்டப்பகலில் ஓய்வு பெற்ற உடற்கல்வி இயக்குனரிடம் ரூ.2½ லட்சத்தை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்