திற்பரப்பு தடுப்பணையில் மீண்டும் படகு சவாரி தொடங்கியது
திற்பரப்பு தடுப்பணையில் மீண்டும் படகு சவாரி தொடங்கியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருவட்டார்,
திற்பரப்பு தடுப்பணையில் மீண்டும் படகு சவாரி தொடங்கியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
படகு சவாரி நிறுத்தம்
குமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக கோதையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தது. மேலும் பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரிநீரும் திறக்கப்பட்டது.
இதனால் திற்பரப்பு தடுப்பணை பகுதியில் வெள்ளப்பெருக்கு நீடித்ததால் அங்கு படகு சவாரி நிறுத்தப்பட்டது. கடந்த 2 நாட்களாக இதே நிலை நீடித்தது. அந்த சமயத்தில் அங்கு வந்த சுற்றுலா பயணிகள், படகு சவாரி மேற்கொள்ள முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.
மீண்டும் தொடங்கியது
மழை குறைந்ததால் நேற்று வெள்ளப்பெருக்கு குறைந்தது. எனவே 2 நாட்களுக்கு பிறகு தடுப்பணை பகுதியில் மீண்டும் படகு சவாரி இயக்கப்பட்டது.
அந்த படகில் சுற்றுலா பயணிகள் உற்சாக பயணம் செய்து மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் அவர்கள் ஆற்றில் குளித்தும் பொழுதை கழித்தனர். மேலும் இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறுகையில், திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஆனால் அங்கு குளிக்க இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை. இது எங்களுக்கு வருத்தத்தை அளிக்கிறது. சமூக இடைவெளியுடன் அருவியில் குளிக்க அனுமதி அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
Related Tags :
Next Story