சாயர்புரம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி


சாயர்புரம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி
x
தினத்தந்தி 10 Sep 2021 1:46 PM GMT (Updated: 2021-09-10T19:16:16+05:30)

சாயர்புரம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலியானார்

சாயர்புரம்:
முத்தையாபுரம் அருகே உள்ள முடுக்காடு ஊரை சேர்ந்த லட்சுமண பெருமாள் மகன் சுடலைமணி (வயது 25). இவர் அவரது உறவினரை சாயர்புரம் புதுக்கோட்டை தேனி ரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைக்காக விடுவதற்காக மோட்டார் சைக்கிளில் வந்தார். அங்கு அவரை இறக்கி விட்டு சுடலைமணி மோட்டார் சைக்கிளில் மீண்டும் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிள் திடீரென்று நிலைதடுமாறி சாலையோரத்தில் உள்ள மரத்தின் மீது மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சாயர்புரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து ெசன்றனர். சுடலைமணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து சாயர்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மேரிஜெமிந்தா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story