மாவட்ட செய்திகள்

கோவில் கும்பாபிஷேகம் + "||" + kumbabisegam

கோவில் கும்பாபிஷேகம்

கோவில் கும்பாபிஷேகம்
தர்ம முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
தொண்டி, 
திருவாடானை தாலுகா  கூகுடி ஊராட்சி அறிவித்தி கிராமத்தில் தர்ம முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனையொட்டி திருவாடானை சந்திரசேகர சிவாச்சாரியார் தலைமையில் யாக பூஜைகள் நடைபெற்றன. பின்னர் பூஜிக்கப்பட்ட புனித நீர் ஆலய கோபுர கலசத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சாமிக்கு மகாஅபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராத னைகள் நடைபெற்றது. அறிவித்தி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 
இதனையொட்டி அன்ன தானம் நடைபெற்றது.கும்பாபிஷேக விழாவில் திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ. கருமாணிக்கம், ஒன்றிய கவுன்சிலர் கார்த்திகேயன் ராஜா, கூகுடி ஊராட்சி தலைவர் சரவணன், கிராம முக்கியஸ்தர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை அறிவித்தி கிராம பொதுமக்கள் மற்றும் விஸ்வகர்மா சமுதாய பொதுமக்கள் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
2. பேச்சியம்மன்- பெரியசாமி கோவில் கும்பாபிஷேகம்
பேச்சியம்மன்- பெரியசாமி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
3. அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்
அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
4. நல்லதங்காள் அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
நல்லதங்காள் அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
5. மதுராபுரி உச்சி கருப்பர் கோவில் கும்பாபிஷேகம்
மதுராபுரி உச்சி கருப்பர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.