மாவட்ட செய்திகள்

நெல்லை சி.எஸ்.ஐ. திருமண்டலபிஷப் தேர்தல் + "||" + Nellai C.S.I. Thirumandala Bishop election

நெல்லை சி.எஸ்.ஐ. திருமண்டலபிஷப் தேர்தல்

நெல்லை சி.எஸ்.ஐ. திருமண்டலபிஷப் தேர்தல்
நெல்லை சி.எஸ்.ஐ. திருமண்டல பிஷப் தேர்தல்
நெல்லை:
நெல்லை சி.எஸ்.ஐ. திருமண்டலத்தில் பிஷப்பாக இருந்த கிறிஸ்துதாஸ் பதவி காலம் முடிந்துவிட்டது. இதைத்தொடர்ந்து புதிய பிஷப் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று காலையில் பாளையங்கோட்டை கதிட்ரல் பேராலயத்திலும், அதன் அருகில் உள்ள மேரி சார்ஜென்ட் மேல்நிலைப்பள்ளியிலும் நடந்தது.
இந்த தேர்தலில் தற்போதைய செயலாளர் டி.எஸ்.ஜெயசிங் அணி சார்பில் சேகர குருக்கள் பர்னபாஸ், கிங்ஸ்லி, சுவாமிதாஸ், ஜெயராஜ் ஆகியோரும். முன்னாள் லே செயலாளர் வேதநாயகம் அணி சார்பில் சேகர குருக்கள் பீட்டர் தேவதாஸ், முத்துராஜ், ஏசா சந்திரகுமார், வேதன்பு ஆகியோரும். சுயேச்சையாக சேகர குருக்கள் பிரே ஜேமிஸ், டேனியல், வில்சன் ஆகியோரும் என மொத்தம் 11 பேர் போட்டியிடுகிறார்கள்.
இதில் முதல் 4 இடங்களை பிடிக்கும் சேகர குருவானவர் பட்டியல் பிரதம பேராயர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு அந்த 4 பேரில் ஒருவரை பிஷப்பாக அறிவிப்பார்கள். அவரே நெல்லை திருமண்டலத்தில் புதிய பிஷப் ஆக அறிவிக்கப்படுவார்.
இந்த புதிய பிஷப் தேர்தலில் நெல்லை திருமண்டலத்தில் உள்ள 257 பெருமன்ற உறுப்பினர்களும், 118 சேகர குருவானவர்களும் வாக்களித்தனர். இதைத்தொடர்ந்து மாலையில் வாக்கு எண்ணும் பணி நடந்தது.