மாவட்ட செய்திகள்

மெரினா கடற்கரையில் மரத்தில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை + "||" + Youth commits suicide by hanging from tree at Marina Beach

மெரினா கடற்கரையில் மரத்தில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

மெரினா கடற்கரையில் மரத்தில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
சென்னை மெரினா கடற்கரையில் மரத்தில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை, 

சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலைக்கு அருகே உள்ள மரத்தில் நேற்று காலை 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் அண்ணாசதுக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, மரத்தில் தொங்கிய வாலிபரின் உடலை மீட்டு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இறந்த நபர் யார்? அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.