முத்தூர் - ஈரோடு சாலையில் பகுதி நேர புதிய ரேஷன் கடை


முத்தூர் - ஈரோடு சாலையில் பகுதி நேர புதிய ரேஷன் கடை
x
தினத்தந்தி 11 Sep 2021 3:49 PM GMT (Updated: 11 Sep 2021 3:49 PM GMT)

முத்தூர் ஈரோடு சாலையில் பகுதி நேர புதிய ரேஷன் கடை

முத்தூர்:
திருப்பூர் மாவட்டம் முத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் ஈஸ்வரன் கோவில் வீதி, பெருமாள் கோவில் வீதி, கொங்கு நகர், ஈரோடு சாலை மேற்கு, வடக்கு, ஸ்ரீராம் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள 335 குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் பகுதி நேர ரேஷன் கடை ஈரோடு சாலையில் அரசு நடுநிலைப்பள்ளிஅருகில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று காலை 11 மணிக்கு நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் தலைமை தாங்கினார். தி.மு.க. வடக்கு மாவட்ட பொறுப்பாளர் இல.பத்மநாபன், வெள்ளகோவில் ஒன்றிய பொறுப்பாளர் மோளக்கவுண்டன்வலசு கே.சந்திரசேகரன், முத்தூர் பேரூர் செயலாளர் மு.க.அப்பு, தாராபுரம் சப்-கலெக்டர் ஆனந்த மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சீனிவாசன் வரவேற்று பேசினார்.
விழாவில் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய பகுதி நேர ரேஷன் கடையை  திறந்து வைத்து பொதுமக்களுக்கு சர்க்கரை வழங்கி அரசின் மக்கள் நலத்திட்ட சாதனைகள் குறித்து பேசினார். விழாவில் காங்கேயம் தாசில்தார் சிவகாமி, கூட்டுறவு சார் பதிவாளர் கவிதா மற்றும் பேரூராட்சி தி.மு.க.முன்னாள் கவுன்சிலர்கள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் சண்முகவேல் நன்றி கூறினார்.
முன்னதாக முத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று காலை 10.30 மணிக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் தலைமையில் மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவு நாளையொட்டி தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அலங்கரிக்கப்பட்ட பாரதியாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

Next Story