கண்காணிப்பு அலுவலர் ஆய்வு


கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
x
தினத்தந்தி 11 Sept 2021 11:09 PM IST (Updated: 11 Sept 2021 11:09 PM IST)
t-max-icont-min-icon

தடுப்பூசி முகாம் பற்றி கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.

சிவகங்கை, 
சிவகங்கை மாவட்டத்திற்கான தடுப்பூசி முகாமிற்கான சிறப்பு கண்காணிப்பு அலுவலராக புவியியல் மற்றும் சுரங்கங்கள் துறை இயக்குனர் நிர்மல்ராஜ், நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் குறித்து ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்மணிவண்ணன், அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் ரேவதி, மருத்துவத்துறை இணை இயக்குனர் இளங்கோ மகேஸ்வரன், சுகாதாரத்துறை துணை இயக்குனர் ராம்கணேஷ், குடும்ப நலத்துறை துணை இயக்குனர் டாக்டர் யோகவதி, வருவாய் கோட்டாட்சியர்கள் முத்துக்கழுவன் (சிவகங்கை), பிரபாகரன் (தேவகோட்டை), சிவகங்கை நகராட்சி ஆணையர்அய்யப்பன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 
பின்னர் கண்காணிப்பு அலுவலர் சிவகங்கை நகராட்சிக்கு உட்பட்ட ராம்நகர், சோலைநகர் சுந்தரநடப்பு ஊராட்சி பகுதி, மானா மதுரை ஓ.வி.சி. மேல்நிலைப்பள்ளி, மேலப்பசலை ஊராட்சி ஆகிய பகுதிகளில் சிறப்பு தடுப்பூசி முகாம் பணியை நேரில் பார்வையிட்டார்.

Next Story