காரிமங்கலம் அருகே வெங்காயம் ஏற்றி வந்த மினி வேன் கவிழ்ந்து விபத்து


காரிமங்கலம் அருகே வெங்காயம் ஏற்றி வந்த மினி வேன் கவிழ்ந்து விபத்து
x
தினத்தந்தி 11 Sep 2021 6:10 PM GMT (Updated: 2021-09-11T23:40:54+05:30)

காரிமங்கலம் அருகே வெங்காயம் ஏற்றி வந்த மினி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

காரிமங்கலம்:
பெங்களூருவில் இருந்து சேலம் மாவட்டம் வாழப்பாடிக்கு பெரிய வெங்காயம் ஏற்றிக்கொண்டு ஒரு  மினி வேன் நேற்று வந்து கொண்டு இருந்தது. காரிமங்கலம் அருகே பொன்னேரி தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் வேன் தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேன் டிரைவர், கிளீனர் ஆகிய 2 பேரும் இடிபாடுகளில் சிக்கி காயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து காரிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story