மாவட்ட செய்திகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில்5 மாணவர்கள்- ஆசிரியைக்கு கொரோனா தொற்று + "||" + 5 students- Corona hit the teacher

புதுக்கோட்டை மாவட்டத்தில்5 மாணவர்கள்- ஆசிரியைக்கு கொரோனா தொற்று

புதுக்கோட்டை மாவட்டத்தில்5 மாணவர்கள்- ஆசிரியைக்கு கொரோனா தொற்று
புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 மாணவர்கள்- ஆசிரியைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
புதுக்கோட்டை:
தமிழகத்தில் கடந்த 1-ந் தேதி முதல் 9 முதல் பிளஸ்-2 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் ஆங்காங்கே மாணவ-மாணவிகள், ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்திலும் ஏற்கனவே மாணவ-மாணவிகள் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இந்த நிலையில் குளமங்கலம், பனையப்பட்டி, அறந்தாங்கி, கந்தர்வகோட்டை ஆகிய பகுதிகளில் மேலும் 5 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் பி.அழகாபுரி அரசு பள்ளியை சேர்ந்த ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. ஆசிரியை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை மாணவ-மாணவிகள் 10 பேர், ஆசிரியை ஒருவர் என மொத்தம் 11 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். தொற்று பாதித்தவர்களின் பள்ளிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும், சக மாணவ-மாணவிகள், ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. புதிதாக ஒருவருக்கு கொரோனா தொற்று
புதிதாக ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
2. புதிதாக 2 பேருக்கு கொரோனா
புதிதாக 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
3. புதிதாக 2 பேருக்கு கொரோனா தொற்று
புதிதாக 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
4. புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 4 பேருக்கு கொரோனா தொற்று
புதிதாக 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
5. புதிதாக 30 பேருக்கு கொரோனா தொற்று
புதிதாக 30 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.