3 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
3 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நெல்லை:
அம்பை பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த சம்சுதீன் (வயது 34), கோவில்குளம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் (24), விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள கீழாம்பூரை சேர்ந்த கிஷோர் (20). இவர்கள் மீது விக்கிரமசிங்கபுரம் போலீஸ் நிலையத்தில் கஞ்சா விற்பனை, கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இதனால் இவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் இவர்களால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சீதாலட்சுமி ஆகியோர் கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். இதை கலெக்டர் விஷ்ணு ஏற்று சம்சுதீன், சுப்பிரமணியன், கிஷோர் ஆகியோரை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரும், குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதற்கான உத்தரவை நேற்று பாளையங்கோட்டை சிறை அதிகாரியிடம், இன்ஸ்பெக்டர் சீதாலட்சுமி வழங்கினார்.
..........
Related Tags :
Next Story