கொரோனா தடுப்பூசி முகாம்
மண்டபம் யூனியனில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.
பனைக்குளம்,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி ராமநாத புரம் மாவட்டத்தில் மாவட்ட கலெக்டர் சந்திரகலா ஆலோசனைப்படி கொரோனா தடுப்பூசி முகாம் நடை பெற்றன. மண்டபம் ஊராட்சி ஒன்றியம் வாலாந்தரவை ஊராட்சியில் உள்ள மினி கிளினிக்கில் ஒன்றிய குழு தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். முகாமிற்கு வந்த ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் செந்தாமரைச் செல்வி, ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் ஜீவானந்தம், வாலாந்தரவை ஊராட்சி தலைவர் முத்தமிழ் செல்வி பூரணவேல் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். இதேபோல் வெள்ளரி ஓடை, காரான் ஆகிய ஊராட்சிகளில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. ஊராட்சி தலைவர்கள் துளசி தேவி, வெள்ளரி ஓடை சந்திர சேகர், காரான் சக்திவேல், ஒன்றிய கவுன்சிலர் பேச்சியம்மாள் ஜெயச்சந்திரன், கும்பரம் முருகேசன், சேது நகர் உதயமூர்த்தி, மேட்டூர் காரான் லோகநாதன், ஆகியோர்கள் முகாமில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தேவிபட்டிணம் ஊராட்சியில் அதன் தலைவர் ஹமீதியா ராணி ஜாகிர் உசேன் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி முகாமுக்கு ஏற்பாடு செய்திருந்தார். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளர் முனியசாமி மற்றும் அலுவலக பணியாளர்கள் செய்து இருந்தனர்.
Related Tags :
Next Story