திருச்சி மாவட்டத்தில் ஒரேநாளில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 332 பேருக்கு கொரோனா தடுப்பூசி


திருச்சி மாவட்டத்தில் ஒரேநாளில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 332 பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 13 Sept 2021 2:05 AM IST (Updated: 13 Sept 2021 2:05 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற மாபெரும் சிறப்பு முகாமில் நேற்று ஒரேநாளில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 332 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது

திருச்சி
திருச்சி மாவட்டத்தில் நேற்று கொரோனா தடுப்பூசி மாபெரும் சிறப்பு முகாம் மாநகரில் 126 இடங்களிலும் புறநகரில் 505 இடங்களிலும் என்று மொத்தம் 631 இடங்களில் நடைபெற்றது. இதில் 1 லட்சத்து 37 ஆயிரத்து 500 பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்ற இந்த முகாமில் அந்தந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
மேலும் திருச்சி மாநகரில் கி.ஆ.பெ.விசுவநாதம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாமை அமைச்சர் கே.என்.நேருவும், காட்டூர் புனித பிலோமினாள் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாமை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
1 லட்சம் பேருக்கு தடுப்பூசி
திருச்சி மாவட்டத்தில் நேற்று நடந்த கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில்  மொத்தம் 1 லட்சத்து 10 ஆயிரத்து 332 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதன்மூலம் தமிழக அளவில் ஒரே நாளில் அதிகளவில் ஊசி போட்ட சுகாதார மாவட்டங்கள் பட்டியலில் 4-ம் இடத்தை திருச்சி மாவட்டம் பெற்றுள்ளது.


Next Story