களக்காட்டில் 20 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
20 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
களக்காடு:
களக்காட்டில் கோவில்பத்து முத்தையா பள்ளி, கோவில்பத்து ஆரம்ப சுகாதார நிலையம், வியாசராஜபுரம், கோட்டை, காந்திவீதி, பழைய பேரூராட்சி அலுவலகம், புதிய பஸ் நிலையம், சிதம்பரபுரம், ராஜபுதூர், மூங்கிலடி தொடக்கப்பள்ளி, களக்காடு ஆற்றங்கரை தெரு, கீழப்பத்தை, மஞ்சுவிளை, மேலப்பத்தை, மேலக்கருவேலங்குளம், சிங்கம்பத்து, கீழக்கருவேலங்குளம், சிதம்பரபுரம் பஸ் நிறுத்தம் உள்பட 20 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. இதில் மொத்தம் 1,466 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
ஏற்பாடுகளை களக்காடு பேரூராட்சி மற்றும் திருக்குறுங்குடி சுகாதார நிலையத்தினர் செய்திருந்தனர். முன்னதாக தடுப்பூசி போடுவதற்காக பேரூராட்சி ஊழியர்கள் வீடு, வீடாக சென்று டோக்கன் வழங்கினர். இந்த டோக்கனுடன் வந்தவர்களுக்கு முகாம்களில் பரிசுகள் வழங்கப்பட்டன. மதியம் 12 மணிக்கு முகாம்களில் மருந்துகள் காலியானது. இதனால் மதியத்திற்கு பின் முகாம்களுக்கு வந்த பொதுமக்கள் தடுப்பூசி செலுத்த முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
Related Tags :
Next Story