திருமணத்திற்கு மகன் அழைக்காததால் தந்தை தற்கொலை


திருமணத்திற்கு மகன் அழைக்காததால் தந்தை தற்கொலை
x
தினத்தந்தி 13 Sept 2021 9:00 PM IST (Updated: 13 Sept 2021 9:00 PM IST)
t-max-icont-min-icon

திருமணத்திற்கு மகன் அழைக்காததால் தந்தை தற்கொலை செய்துகொண்டார்.

ஆர்.எஸ்.மங்கலம், 
ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா கடலூர் ஊராட்சி உப்பூர் சத்திரத்தை சேர்ந்தவர் கவுரிநாதன் (வயது50). இவரின் முதல் மனைவி இறந்ததால் 2-வது மனைவியான பூமலருடன் வசித்துவந்தார். இந்தநிலையில் முதல் மனைவியின் மகன் பிரபாகரன் என்பவருக்கு கடந்த 8-ந் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்திற்கு கவுரிநாதனை அழைக்காததால் விரக்தியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருப்பாலைக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

Next Story