மாவட்ட செய்திகள்

பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் சாலை மறியல் + "||" + Co-operative members road blockade

பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் சாலை மறியல்

பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் சாலை மறியல்
ஜோலார்பேட்டை அருகே பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தை கலைக்கக்கோரியும், பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியரை மீண்டும் பணி அமர்த்தக் கோரியும் சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர்.
ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை அருகே பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தை கலைக்கக்கோரியும், பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியரை மீண்டும் பணி அமர்த்தக் கோரியும் சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர்.

முறைகேடு

ஜோலார்பேட்டையை அடுத்த காவேரிப்பட்டு பகுதியில் காவேரிபட்டு பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. காவேரிப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த 750-க்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

இவர்கள் உற்பத்தி செய்யும் பாலை சங்கத்தில் ஊற்றி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக சங்கத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக பால் உற்பத்தியாளர்கள் பலமுறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. சங்கத்தில் பணிபுரிந்த விஜயகுமார் என்பவர் சங்கத்தில் நடக்கும் முறைகேடுகள் பற்றி மேல் அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தார். இதனல் கடந்த 14 மாதங்களுக்கு முன்பு விஜயகுமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

சாலை மறியல்

இதனை எதிர்த்து விஜயகுமார் கூட்டுறவுத்துறை அதிகாரிகளிடம் முறையீடு செய்தார். அதைத்தொடர்ந்து அவரை மீண்டும் பணியில் சேர்க்க அதிகாரிகள் உத்தரவிட்டனர். ஆனால் இதுவரை பணியில் சேர்க்கப்படவில்லை. இதனால் விஜயகுமார் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, அவரை மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவிடப்பட்டது. இதையும் சங்க நிர்வாகக்குழு ஏற்கவில்லை.
இந்த நிலையில் சங்கத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகக் கூறி சங்கத்தை கலைக்கவும், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஊழியரை மீண்டும் பணியில் சேர்க்கக் கோரியும் சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று காலை சங்க அலுவலகத்தை முற்றுகையிட்டு ஜோலார்பேட்டை- புத்துக்கோவில் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்ததும் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி மற்றும் போலீசார் விரைந்து சென்று சாலை மறியல் ஈடுபட்வர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் சாலை மறியலை கைவிட்டனர். சுமார் ஒருமணிநேரம் நடந்த இந்த மறியலல் பரபரப்பு ஏற்பட்டது.