குடிமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட தொட்டம்பட்டி ஊராட்சியில்குடிநீர் கேட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடிமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட தொட்டம்பட்டி ஊராட்சியில்குடிநீர் கேட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடிமங்கலம்:
குடிமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட தொட்டம்பட்டி ஊராட்சியில்குடிநீர் கேட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடிதண்ணீர் தட்டுப்பாடு
குடிமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்டது தொட்டம்பட்டி ஊராட்சி. தொட்டம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட ஜல்லிப்பட்டி பிரிவு வரை உள்ளதோட்டத்து சாலை பகுதிகளுக்கு திருமூர்த்தி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. தோட்டத்துசாலை பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த வீடுகளுக்கு முறையாக தண்ணீர் திறந்து விடப்படுவது இல்லை.
இதனால் 10நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் கிடைக்கிறது.தோட்டத்து சாலை பகுதிகளுக்கு திறந்துவிடப்படும் குடிதண்ணீர் போதுமானதாக இல்லை எனகூறி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது “ஜல்லிப்பட்டி பிரிவு வரை சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தோட்டத்து சாலை பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் வகையில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கதொட்டி அமைக்கப்பட்டது.மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து திருமூர்த்தி கூட்டு குடிநீர் திட்டபிரதான குழாயிலிருந்து தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.தண்ணீர் செல்லும் பாதையில் பிளாஸ்டிக் தொட்டி அமைக்கப்பட்டுள்ளன.
பிரச்சினைக்கு தீர்வு
இந்தநிலையில் நேற்று தோட்டத்து சாலை பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்ட சிறிது நேரத்தில்மின்சாரம் தடைபட்டதால் தண்ணீர் செல்லவில்லை. மின்சாரம் வந்தவுடன்மீண்டும் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இதனைத்தொடர்ந்து போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டனர்.
Related Tags :
Next Story