பொங்கலூர் அருகே கொடுவாயில் 5 கடைகளின் பூட்டை உடைத்து பணம் மற்றும் செல்போன்களை மர்ம நபர் திருடிச் சென்றுள்ளார்.


பொங்கலூர் அருகே கொடுவாயில் 5 கடைகளின் பூட்டை உடைத்து பணம் மற்றும் செல்போன்களை மர்ம நபர் திருடிச் சென்றுள்ளார்.
x
தினத்தந்தி 13 Sept 2021 10:10 PM IST (Updated: 13 Sept 2021 10:10 PM IST)
t-max-icont-min-icon

பொங்கலூர் அருகே கொடுவாயில் 5 கடைகளின் பூட்டை உடைத்து பணம் மற்றும் செல்போன்களை மர்ம நபர் திருடிச் சென்றுள்ளார்.

பொங்கலூர்
பொங்கலூர் அருகே கொடுவாயில் 5 கடைகளின் பூட்டை உடைத்து பணம் மற்றும் செல்போன்களை மர்ம நபர் திருடிச் சென்றுள்ளார். 
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மருந்து கடையில் திருட்டு
பொங்கலூர் அருகில் உள்ள கொடுவாயை சேர்ந்தவர் சரவணக்குமார். இவர் அந்த பகுதியில் மருந்துக்கடை வைத்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டி விட்டு சென்று விட்டார். பின்னர் நேற்று காலையில் கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த உரிமையாளர் கடை உள்ளே சென்று பார்த்தார். அப்போது கடையில் வைத்திருந்த ரூ.25 ஆயிரத்தை மர்ம ஆசாமி திருடி சென்றது தெரியவந்தது. அதுபோல் அதன் அருகில் ஆதி சங்கரன் மருந்துக்கடையின் பூட்டும் உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அவர் உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த ரூ.600 திருட்டு போயிருந்தது. 
அதே போல் கதர்கடை மேடு பகுதியில் உள்ள ரவி என்பவரின் துணிக்கடையில் திருட முயற்சி நடந்துள்ளது. அங்கு எதுவும் கிடைக்காததால் அதன் அருகில் இருந்த குணசேகரன் என்பவரின் ஒரு மளிகை கடையின் பூட்டை உடைத்து கடையில் இருந்து ரூ.2 ஆயிரத்தை திருடி சென்றுள்ளனர். மேலும் அந்த பகுதியில் இருந்த பசுபதி என்பவரின் செல்போன் கடையில் 3 செல்போன்கள் மற்றும் ஒரு கண்காணிப்பு கேமரா ஆகியவை திருடப்பட்டுள்ளது. 
போலீசார் விசாரணை
இந்த 5 கடைகளிலும் ஒரு ஆசாமியே திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் கூறுகிறார்கள். சம்பவத்தன்று இரவு மருந்து கடைக்கு சென்ற ஆசாமி, அந்த கடையின் பூட்டை உடைத்து பணத்தை திருடிய பின்னர் மற்றொரு மருந்து கடையில் புகுந்து அங்கிருந்த ரொக்கத்தையும் திருடியுள்ளார். பின்னர் துணிக்கடையில் எதுவும் கிடைக்காததால் மளிகை கடை மற்றும் செல்போன் கடையில் திருடியுள்ளார்.  
இதுகுறித்து கடைக்காரர்கள் கொடுத்த புகாரின் பேரில் அவினாசிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் உதவியுடன் மர்ம நபர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். ஒரே இரவில் 5 கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது கொடுவாய் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story