செல்போன் பறித்த 2 பேர் கைது
செல்போன் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் சீதளி வடகரையை சேர்ந்த சேக் அப்துல்லா மகன் ஆசிக் . இவர் வீட்டிற்கு வெளியே ரோட்டில் நின்று செல்போனில் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 2 பேர் ஆஷிக்கிடம் காரைக்குடிக்கு வழி கேட்பதுபோல் செல்போனை பறித்துச்சென்றுவிட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற திருப்பத்தூர் நகர் காவல் நிலையத்தைச் சேர்ந்த முதுநிலை காவலர் அன்பு அவர்கள் மீது சந்தேகம் அடைந்து எஸ்.எஸ்.கோட்டை இன்ஸ்பெக்டர் அர்ஜுனன் மற்றும் மற்றொரு போலீசாருக்கு தகவல் கொடுத்து 2 பேரையும் பிடித்தனர். அதில் அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த ஆறுமுகம் மகன் அஜய்குமார் (வயது19), நத்தம் செட்டிக் குலத்தைச் சேர்ந்த சக்திவேல் மகன் தீனதயாளன் (20) என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story