மாவட்ட செய்திகள்

தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை + "||" + Worker commits suicide

தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
குலசேகரம் அருகே மனைவி கோபித்து கொண்டு தாயார் வீட்டுக்கு சென்றதால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.|
குலசேகரம்:
குலசேகரம் அருகே மனைவி கோபித்து கொண்டு தாயார் வீட்டுக்கு சென்றதால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- 
 தொழிலாளி
குலசேகரம் அருகே உள்ள அரமன்னம் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 38), தொழிலாளி. இவருடைய மனைவி மேரி கில்டா (33). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ஜெயக்குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.
அவர் தினமும் மது குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதையடுத்து மேரி கில்டா கணவரிடம் கோபித்துக் கொண்டு மகன்களுடன் தாயார் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால், கடந்த சில நாட்களாக ஜெயக்குமார் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். 
தற்கொலை
இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டின் படுக்கை அறையில் ஜெயக்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைகண்டு அவருடைய தாயார் அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி குலசேகரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 
உடனே போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.