மாவட்ட செய்திகள்

கர்நாடகத்தில் புதிதாக 673 பேருக்கு கொரோனா + "||" + Corona for 673 newcomers in Karnataka

கர்நாடகத்தில் புதிதாக 673 பேருக்கு கொரோனா

கர்நாடகத்தில் புதிதாக 673 பேருக்கு கொரோனா
கர்நாடகத்தில் புதிதாக 673 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு:

கர்நாடகத்தில் நேற்று ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 14 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதிதாக 673 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுவரை 29 லட்சத்து 62 ஆயிரத்து 408 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று 1,074 பேர் டிஸ்சார்ஜ் ஆன நிலையில், குணம் அடைந்தோர் எண்ணிக்கை 29 லட்சத்து 8 ஆயிரத்து 622 ஆக உயர்ந்து உள்ளது. 16 ஆயிரத்து 241 பேர் சிகிச்சையில் உள்ளனர். வைரஸ் தொற்றுக்கு மேலும் 13 பேர் இறந்தனர். இதனால் சாவு எண்ணிக்கை 37 ஆயிரத்து 517 ஆக உள்ளது.

  பெங்களுரு நகரில் 214 பேர், தட்சிண கன்னடாவில் 115 பேர், உடுப்பியில் 75 பேர், ஹாசனில் 51 பேர் உள்பட 20 மாவட்டங்களில் 673 பேர் பாதிக்கப்பட்டனர். 10 மாவட்டங்களில் கொரோனாவுக்கு பாதிப்பு இல்லை. தட்சிண கன்னடாவில் 5 பேர், பெங்களூரு நகரில் 3 பேர், பெலகாவி, பெங்களூரு புறநகர், குடகு, சிவமொக்கா, துமகூருவில் தலா ஒருவர் என 13 பேர் இறந்தனர். 23 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை.
  மேற்கண்ட தகவலை சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.