நெல்லித்தோப்பில் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு


நெல்லித்தோப்பில் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
x
தினத்தந்தி 14 Sep 2021 5:13 PM GMT (Updated: 14 Sep 2021 5:13 PM GMT)

நெல்லித்தோப்பில் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

புதுச்சேரி, செப்.-
நெல்லித்தோப்பில் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
உண்டியல் உடைப்பு
புதுவை நெல்லித்தோப்பு சவரிபடையாச்சி வீதியில் பெரிய பாளையத்தம்மன் கோவில் உள்ளது. கடந்த 11-ந்தேதி இரவு பூஜை முடிந்து கோவிலை பூட்டிவிட்டு பூசாரி மற்றும் கோவில் நிர்வாகிகள் சென்று உள்ளனர்.
இந்தநிலையில் மறுநாள் காலையில் கோவிலில் பூஜை செய்யும் நாகபூஷணம் என்பவர் வந்து பார்த்தபோது உண்டியல் உடைக்கப்பட்டு இருந்தது. நள்ளிரவில் கோவிலுக்குள் புகுந்த மர்ம ஆசாமிகள் யாரை உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றுள்ளனர்.
வலைவீச்சு
கடந்த 6 மாதமாக உண்டியல் பணம் எடுக்கப்படாமல் இருந்தநிலையில் அதில் ரூ.5 ஆயிரம் வரை இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கோவில் அறங்காவலர் குழு தலைவர் முருகானந்தம் உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார்.
புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story