மாவட்ட செய்திகள்

ராமையா காலனியில் தண்ணீர் தட்டுப்பாடு + "||" + water shortage in ramaya colony

ராமையா காலனியில் தண்ணீர் தட்டுப்பாடு

ராமையா காலனியில் தண்ணீர் தட்டுப்பாடு
ராமையா காலனியில் தண்ணீர் தட்டுப்பாடு
திருப்பூர்
திருப்பூர் மாநகராட்சி 25வது வார்டு ராமையா காலனி பகுதியில் ஏராளமானவர்கள் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். இந்த பகுதி பொதுமக்களின் தேவைகளுக்காக அந்த பகுதியில் 5 குடிநீர் குழாய்கள் மூலம் உப்பு தண்ணீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்த தனி நபர் ஒருவருக்கு தனியாக ஒரு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் 5 குடிநீர் குழாய்கள் மூலம் உப்புதண்ணீர் பெற்று வரும் பொதுமக்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் தட்டு்ப்பாடு ஏற்பட்டுள்ளது. 
இதனால் ஆத்திரமடைந்த ராமையாகாலனி பொதுமக்கள் நேற்று அந்த பகுதியில் திரண்டனர். மேலும், இது தொடர்பாக புகார் தெரிவிக்க குமார்நகரில் உள்ள குடிநீர் மேல்நிலைநீர்தேக்க தொட்டி வளாகத்தில் உள்ள மாநகராட்சி உதவி பொறியாளர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர். அதிகாரிகள் இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். தொடர்ந்து அங்கிருந்து அவர்கள் கலைந்து சென்றனர்.