மாவட்ட செய்திகள்

ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு + "||" + Food safety officers inspect hotels

ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு
ஆரணியில் உள்ள ஓட்டல்களில் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் 20 கிலோ கொட்டுபோன இறைச்சி பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.
ஆரணி

ஆரணியில் உள்ள ஓட்டல்களில் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் 20 கிலோ கொட்டுபோன இறைச்சி பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.

சிறுமி பலி

ஆரணி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அசைவ ஓட்டலில் கடந்த 8-ந் தேதி இரவு சிக்கன் தந்தூரி உணவு வகைகளை சாப்பிட்டு 40-க்கும் மேற்பட்டோர் உடல் உபாதைகள் ஏற்பட்டு அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டனர்.

  அங்கு உணவு சாப்பிட்ட ஆனந்தன் என்பவரின் மகள் லோஷினி (வயது 10) என்பவர் மரணமடைந்தார்.

இதனையொட்டி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் தொடர்ந்து கடந்த 10-ந் தேதி முதல் அசைவ ஓட்டல்கள் மற்றும் அனைத்து வகையான உணவு ஓட்டல்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

20 கிலோ இறைச்சி பறிமுதல்

இந்த நிைலயில் இன்று மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ஏ.ராமகிருஷ்ணன் தலைமையில் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சேகர், சுப்பிரமணி, இளங்கோ, கைலாஷ்குமார் உள்ளிட்ட அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது ஆரணி அண்ணா சிலை அருகே காந்தி ரோட்டில் உள்ள ஒரு அசைவ ஓட்டலில் பிரீசரில் வைக்கப்பட்டிருந்த கெட்டுப்போன நண்டு, மீன், கோழி இறைச்சி போன்றவர்கள் சுமார் 20 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது.

 பின்னர் அவற்றை பினாயில் ஊற்றி அழித்தனர். அந்தக் கடைக்காரர் மீது உணவு பாதுகாப்பு துறை மூலமாக பிரிவு 55-ன்படி தரமற்ற உணவு தயாரித்தல் சம்பந்தமாக (சுகாதாரமின்மை உணவு தயாரிப்பதற்காக) வழக்குப்பதிவு செய்தனர் மேலும் அருகில் உள்ள அசைவ ஓட்டல்களில் ஆய்வு மேற்கொண்டனர்.