கோவில் அலுவலக பூட்டை உடைத்து ரூ.16 ஆயிரம் திருட்டு

திருச்சி, செப்.15-
திருச்சி-தஞ்சைரோடு காந்திமார்க்கெட் பகுதியில் செல்லாயிஅம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் நிர்வாகியாக இருப்பவர் தனசேகர் (வயது 71). இவர் கடந்த 12-ந் தேதி இரவு கோவில் அருகே உள்ள அலுவலகத்தை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் நேற்று முன்தினம் காலை மீண்டும் அலுவலகத்தை திறக்க வந்தார். அப்போது அலுவலக கதவுபூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.16 ஆயிரம் திருட்டு போய் இருந்தது. மேலும், அங்கு வைக்கப்பட்டு இருந்த ஒரு டி.வி.யும் திருடப்பட்டு இருந்தது. இந்த சம்பவம் குறித்து காந்திமார்க்கெட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story