ஒருங்கிணைந்த இஸ்லாமிய கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்


ஒருங்கிணைந்த இஸ்லாமிய  கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 Sept 2021 9:34 PM IST (Updated: 15 Sept 2021 9:34 PM IST)
t-max-icont-min-icon

ஒருங்கிணைந்த இஸ்லாமிய கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், 
ஒருங்கிணைந்த இஸ்லாமிய கூட்டமைப்பு ஷாஹின் பார்க் போராட்டக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று மாலை திருப்பூர் சி.டி.சி. கார்னரில் நடைபெற்றது. டெல்லியில் பெண் போலீஸ் ராபியாவை படுகொலை செய்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் ஹாலிதீன் தலைமை தாங்கினார். ஐக்கிய சுன்னத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட தலைவர் ஜக்கரிய்யா, ஒருங்கிணைப்பாளர் முகமது யூசுப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநில துணைத்தலைவர் சுந்தரவள்ளி, பெரியபள்ளிவாசல் தலைமை இமாம் சல்மான் பாரீஸ் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். இதில் திரளான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.


Next Story