அரசு பஸ் மோதி ஒருவர் பலி


அரசு பஸ் மோதி ஒருவர் பலி
x
தினத்தந்தி 16 Sept 2021 1:13 AM IST (Updated: 16 Sept 2021 1:13 AM IST)
t-max-icont-min-icon

அரசு பஸ் மோதி ஒருவர் பலி

சிவகாசி
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவில் உள்ள எம்.கல்லுப்பட்டியை சேர்ந்தவர் தனசுந்தரம்(வயது 56). இவர் நேற்று முன்தினம் சாத்தூர் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அரசு பஸ் ஒன்று தனசுந்தரம் மீது மோதியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து முதியவர் தனசுந்தரத்தின் மனைவி சுசிலாதேவி கொடுத்த புகாரின்பேரில் சாத்தூர் டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து அரசு பஸ் டிரைவரான ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள இலந்தைக்குளத்தை சேர்ந்த மாயாண்டி (37) என்பவரை கைது செய்தனர்.

Next Story