தபால்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பாளையங்கோட்டையில் தபால்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை:
அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் குரூப்-சி பிரிவு ஊழியர்கள் பாளையங்கோட்டை தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். கோட்ட தலைவர் அழகுமுத்து தலைமை தாங்கினார். மாநில கவுன்சிலர் வண்ணமுத்து முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் ஜேக்கப்ராஜ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
தமிழகம் முழுவதும் அஞ்சல் ஊழியர்களுக்கு புதுவணிகம் என்ற பெயரில் இலக்குகளை நிர்ணயித்து நெருக்கடி கொடுப்பதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் முத்து பேச்சியம்மாள், ஆனந்தகோமதி, புஷ்பாகரன், சங்கரலிங்கம், ஆவுடைநாயகம், நெல்லையப்பன், குருசாமி, ஆனந்தராஜ், வளர்மதி, சுந்தரம், நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story