ஏழை கர்ப்பிணிகளுக்கு கனவாக இருந்த வளைகாப்பு நிகழ்ச்சியை நனவாக்கியவர் கருணாநிதி-அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேச்சு


ஏழை கர்ப்பிணிகளுக்கு கனவாக இருந்த வளைகாப்பு நிகழ்ச்சியை நனவாக்கியவர் கருணாநிதி-அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேச்சு
x
தினத்தந்தி 17 Sep 2021 7:39 PM GMT (Updated: 17 Sep 2021 7:39 PM GMT)

ஏழை கர்ப்பிணிகளுக்கு கனவாக இருந்த வளைகாப்பு நிகழ்ச்சியை நனவாக்கியவர் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி என்று அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேசினார்.

திருப்பத்தூர், 

ஏழை கர்ப்பிணிகளுக்கு கனவாக இருந்த வளைகாப்பு நிகழ்ச்சியை நனவாக்கியவர் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி என்று அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேசினார்.
வளைகாப்பு விழா
திருப்பத்தூரில் சமூக நலம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார். மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ தமிழரசி முன்னிலை வகித்தார். தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசியதாவது:-
 மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி தனது ஆட்சி காலத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை வழங்கியதுடன் அவர்கள் வேலைவாய்ப்பு பெறுவதற்காக தனி அங்கீகாரத்தை வழங்கினார். அவர் வழியில் தற்போது தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் பெண்களின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதற்கு முந்தைய காலக்கட்டத்தில் வசதி படைத்தவர்கள் மட்டும் தங்களது வீட்டில் உள்ள கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தி வந்த வகையில் ஏழை குடும்பத்தில் பிறந்த பெண்களுக்கு அது வெறும் கனவாகவே இருந்து வந்தது. அந்த கனவை நிறைவேற்றி தந்தவர் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி. தற்போது அவரது வழியில் ஆட்சி நடத்தி வரும் அவரது மகன் மு.க.ஸ்டாலின் வளைகாப்பு நிகழ்ச்சியில் கர்ப்பிணி பெண்களுக்க 11 வகையான பொருட்கள் அடங்கிய தொகுப்புடன் வளையல்கள் வழங்கி 5 வகையான கலவை சாதங்களும் வழங்கி வருகிறார்.
தற்போது பணிக்கு செல்லும் பெண்களுக்கு நகர பஸ்சில் இலவச பயணத்தையும் தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். 
300 கர்ப்பிணிகளுக்கு...
விழாவில் 300 கர்ப்பிணிகளுக்கு வளையல்கள் மற்றும் 11 வகையான தொகுப்புகள் அடங்கிய பொருட்கள் மற்றும் 5 வகையான கலவை சாதங்கள் ஆகியவை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நலம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் அன்புகுளோரியா, உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் பிரபாவதி, திருப்பத்தூர் யூனியன் தலைவர் சண்முகவடிவேல், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள் கமலிமீனாள், அமுதா, வட்டார வளர்ச்சி அலுவலர் தென்னரசு மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story