85 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது


85 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது
x
தினத்தந்தி 21 Sept 2021 10:35 PM IST (Updated: 21 Sept 2021 10:35 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று 85 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சிகிச்சை பலனின்றி 3 பேர் பலியானார்கள்.

திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று  85 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சிகிச்சை பலனின்றி 3 பேர் பலியானார்கள்.
கொரோனா பாதிப்பு 
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுபோல் கொரோனா தடுப்பூசி போடும் பணியும் மும்முரமாக நடந்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 100க்கும் கீழாகவே இருந்து வருகிறது. இதற்கிடையே கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் மாவட்டங்களில் சில கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு அறிவித்துள்ளது. 
இந்நிலையில் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1647 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 85 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் கோவை மற்றும் திருப்பூரில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுபோல் இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
3 பேர் பலி 
தற்போது மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 92 ஆயிரத்து 208 ஆக உள்ளது. இதுபோல் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 79 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்து 349 ஆக உள்ளது. மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 909 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 
இதற்கிடையே மாவட்டம் முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 3 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று பலியாகினர். இதனால் பலி எண்ணிக்கை 950 ஆக உள்ளது. கொரோனா தொற்று முழுவதும் கட்டுப்பாட்டிற்குள் வரவில்லை என்பதால் அரசு வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. 



Next Story