நாமக்கல் மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய 33 பேர் கைது


நாமக்கல் மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய 33 பேர் கைது
x
தினத்தந்தி 24 Sept 2021 10:00 PM IST (Updated: 24 Sept 2021 10:03 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய 33 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல்,

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் வகையில் கொலை, கொள்ளை உள்பட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் மற்றும் ரவுடிகளை கைது செய்ய டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் மேற்பார்வையில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய 72 பேரின் வீடுகளுக்கு சென்று போலீசார் சோதனை நடத்தினர். அதில் 33 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story