காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 24 Sept 2021 11:57 PM IST (Updated: 24 Sept 2021 11:57 PM IST)
t-max-icont-min-icon

காரைக்குடியில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

காரைக்குடி,

வேளாண் சட்டத்தை திரும்ப பெறவேண்டும். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்து காரைக்குடியில் உள்ள நாடாளுமன்ற அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாங்குடி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசிற்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் காரைக்குடி நகர தலைவர் பாண்டிமெய்யப்பன், நகர செயலாளர் கே.டி.குமரேசன், கல்லல் வட்டார தலைவர் ரமேஷ், கல்லல் யூனியன் கவுன்சிலர் அழகப்பன் உள்பட காங்கிரஸ் கட்சியினர் கலந்துகொண்டனர்.

Next Story