மாவட்ட செய்திகள்

கொலை வழக்குகளில் மேலும் 3 பேர் கைது; ஆயுதங்கள் பறிமுதல் + "||" + arrested

கொலை வழக்குகளில் மேலும் 3 பேர் கைது; ஆயுதங்கள் பறிமுதல்

கொலை வழக்குகளில் மேலும் 3 பேர் கைது; ஆயுதங்கள் பறிமுதல்
கொலை வழக்குகளில் மேலும் 3 பேர் கைது; ஆயுதங்கள் பறிமுதல்
பொன்மலைப்பட்டி, செப்.26&
திருச்சி கொட்டப்பட்டு எம்.ஜி.ஆர்.நகர் பகுதியை சேர்ந்தவர் சின்ராஜ் (வயது 24). இவர் கடந்த 15&ந் தேதி பொன்மலைப்பட்டி கடைவீதியில் ஒரு கும்பலால் தலைதுண்டித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பொன்மலை பொன்னேரிபுரம் பகுதியை சேர்ந்த அலெக்ஸ், மேலகல்கண்டார் கோட்டை நாகம்மை வீதியை சேர்ந்த சரத் என்கிற ரத்தினசாமி, காஜாமலை பகுதியை சேர்ந்த ஆல்வின் ஆகிய 3 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் நேற்று மதியம் மேலகல்கண்டார்கோட்டை கம்பி கேட் அருகே பொன்மலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, சந்தேகத்தின் பேரில் கீழக்குறிச்சி அண்ணாநகர் பகுதியை சேர்ந்த ராக்கி என்கிற ராகேஷ் (19), கீழ கல்கண்டார் கோட்டை பெரியார் தெருவை சேர்ந்த சச்சின் (21) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் சின்ராஜ் கொலையில் தொடர்புடையவர்கள் என தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்களையும், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அருகே உள்ள இரூரை சேர்ந்தவர் முத்து (50). இவர் கடந்த 2021&ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிஆர் பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தார். அப்போது இவருக்கும், சிலருக்கும் ஏற்பட்ட தகராறில் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பந்தமாக சிறுகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், இக்கொலை தொடர்பாக ஆர். பாளையம், கவுண்டர் தெருவைச் சேர்ந்த சீனிவாசன் மகன் சிலம்புகுட்டி என்கிற சிலம்பரசன் (22) என்பவரை சிறுகனூர் போலீசார் நேற்று கைது செய்தனர்.தொடர்புடைய செய்திகள்

1. மது விற்றவர் கைது
மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.
2. கஞ்சா விற்ற 3 பேர் கைது
கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
3. இலங்கையை சேர்ந்தவர்கள் கைதான விவகாரம்:மதுரையில் மேலும் ஒரு இடைத்தரகர் கைது
இலங்கையை சேர்ந்தவர்கள் கைதான விவகாரத்தில் மதுரையில் மேலும் ஒரு இடைத்தரகர் கைது செய்யப்பட்டார்.
4. விதிமீறி ஆலையில் பட்டாசு தயாரிப்பு; போர்மேன் கைது
விதிமீறி ஆலையில் பட்டாசு தயாரிப்பு; போர்மேன் கைது
5. சங்கராபுரம் அருகே நடந்த கொலை வழக்கில் 11 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது
சங்கராபுரம் அருகே நடந்த கொலை வழக்கில் 11 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது