14 ரவுடிகள் கைது;ஆயுதங்கள் பறிமுதல்
சிவகாசி கோட்டத்தில் 14 ரவுடிகளை கைது செய்த போலீசார் ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்.
சிவகாசி,
சிவகாசி உட்கோட்டத்துக்கு உட்பட்ட சிவகாசி டவுன், மாரனேரி, சிவகாசி கிழக்கு, திருத்தங்கல், எம்.புதுப்பட்டி ஆகிய போலீஸ்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதியில் துணை போலீஸ் சூப்பிரண்டு பாபுபிரசாந்த் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு 165 ரவுடிகளை தணிக்கை செய்தனர்.
இதில் 14 ரவுடிகள் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டு அவர்களை கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து ஒரு வாள் மற்றும் 8 கத்திகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story