தர்மபுரியில் ஓய்வுபெற்ற போக்குவரத்து கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பணபலன்களை உடனே வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரியில் ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி,
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியர்கள் நல அமைப்பின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி பாரதிபுரத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பின் மாவட்ட தலைவர் குப்புசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முனுசாமி, மாவட்ட பொருளாளர் அசோகன், மாவட்ட நிர்வாகிகள் காவேரி, ராஜா ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.
ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 70 மாத, டி.ஏ. உயர்வை நிலுவை தொகையுடன் வழங்கவேண்டும். ஈட்டிய விடுப்பு நிலுவைத்தொகை வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
கோஷங்கள்.
2020-ம் ஆண்டு மே மாதம் முதல் விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கு பண பலன்களை விரைவாக வழங்க வேண்டும். ஓய்வு பெற்றவர்களில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு பண பலன்களை தாமதமின்றி அளிக்க வேண்டும். தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த சேமநலநிதியை உடனே வழங்கவேண்டும்.
ஓய்வூதிய திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story