கத்தியை காட்டி மிரட்டி ரூ.4 ஆயிரம் பறிப்பு
கணவன்-மனைவியிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.4 ஆயிரம் பறித்த மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
தோகைமலை,
தோகைமலை அருகே உள்ள கீழவெளியூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம் (வயது 55). இவருடைய மனைவி புனிதா (47). கட்டிட தொழிலாளர்களான இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் வழக்கம் போல் திருச்சியில் உள்ள சண்முக நகர் பகுதியில் கட்டிட வேலை செய்துவிட்டு தங்களது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
திருச்சி-தோகைமலை மெயின் ரோட்டில் ஆர்.டி. மலை அருகே உள்ள வடசேரி பிரிவு சாலை அருகே வந்தபோது மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம ஆசாமிகள் கத்தியை காட்டி மிரட்டி மீனாட்சி சுந்தரம், புனிதா ஆகியோரிடம் இருந்த ரூ.4 ஆயிரத்தை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். இந்த சம்பவம் குறித்து தோகைமலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 3 மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story