மரத்தில் தழை ஒடித்ததில் தகராறு; இருதரப்பை சேர்ந்த 6 பேர் மீது வழக்கு


மரத்தில் தழை ஒடித்ததில் தகராறு; இருதரப்பை சேர்ந்த 6 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 29 Sept 2021 1:44 AM IST (Updated: 29 Sept 2021 1:44 AM IST)
t-max-icont-min-icon

மரத்தில் தழை ஒடித்ததில் தகராறு தொடர்பாக இருதரப்பை சேர்ந்த 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சின்னவளையம் கிழக்குத் தெருவை சேர்ந்தவர் அமராவதி(வயது 50). இவர் தனது வீட்டிற்கு அருகில் உள்ள வேப்பமரத்தில் தழையை ஒடித்ததாகவும், அப்போது அதே பகுதியை சேர்ந்த சிவா, சிந்துஜா ஆகியோர் ஏன் தங்களது வேப்பமரத்தில் தழையை ஒடித்தீர்கள் என்று கேட்டு தகாத வார்த்தைகளால் திட்டி இரும்பு குழாயால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அமராவதி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அமராவதி, ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் சிவா, சிந்துஜா ஆகிய மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதேபோல் வேப்பமரத்தில் தழை ஒடித்ததை தட்டிக்கேட்டபோது திட்டி தாக்கியதாக அஞ்சப்பன் என்பவர் கொடுத்த புகாரின்பேரில் அமராவதி, ஸ்டாலின், தங்கமணி, சங்கரி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story