மனைவி தீக்குளிப்பு; கணவர் கைது
மனைவி தீக்குளித்த சம்பவத்தில் கணவர் கைது செய்யப்பட்டார்.
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள வரகுபாடி கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மனைவி பிரியங்கா(வயது 25). கணவன்- மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த பிரியங்கா, சம்பவத்தன்று வீட்டில் மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் அவரது 6 மாத பெண் குழந்தை திரிஷாவுக்கும் தீக்காயம் ஏற்பட்டது. பிரியங்கா உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் குறித்து மருவத்தூர் போலீசார் நடத்திய விசாரணையில், அன்பழகன் அடித்து கீழே தள்ளி விட்டதால் மனம் உடைந்த பிரியங்கா தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதாகவும், அப்போது அவரது குழந்தைக்கும் தீக்காயம் ஏற்பட்டதாகவும், தெரிவித்துள்ளார்.
பிரியங்காவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அன்பழகன், அவரது தாய் ேஜாதி(56) ஆகியோர் மீது மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்பழகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story